Type to search

Local News

மதுபானசாலையை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்

Share

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ரிகிலகஸ்கட பிரதேசத்தில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம் பெற்றது.

மேற்படி விற்பனை நிலையத்திலிருந்த மதுபான போத்தல்களைப் பிறிதொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சிப்பதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் அங்கு சென்றபோதே இவ்வாறு தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது.

காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்திற்கு பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தலையீடு காரணமாக இருக்கலாம் என மத்திய மாகாண மதுவரித்திணைக்களப் பரிசோதகர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link