Type to search

Local News

புத்தாண்டை வீட்டிலிருந்தே குடும்பத்துடன் கடைப்பிடியுங்கள்

Share

மலரும் புத்தாண்டை வீட்டிலிருந்தே குடும்ப உறவுகளுடனும் இறை பிரார்த்தனையுடனும் இல்லாதவர்களுக்கு உதவும் கைங்கரியத்துடன் கடைப்பிடியுங்கள் என சைவ ஆதீனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பில் நல்லை ஆதீனம், தென்கயிலை ஆதீனம், கீரிமலை சைவ ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு முதல்வர்கள் கூட்டாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இன்று உலகின் மிகவும் நெருக்கடியான, துன்பகரமான நோயின் தாக்கத்தின் விளை வுகளுடன் புதிய தமிழ் – சிங்கள புத்தாண்டு மலர்கின்றது.

இந்த முக்கியமான தருணத்தில் எம்மிடையே உள்ள சகல வேற்றுமைகளையும் மறந்து சகோதரத்துவத்துடன் இக்கொடிய கொரோனா நோயிலிலிருந்து விடுபட எம்மால் இயன்ற சகல சுகாதார வழிமுறை களையும் மானசீகமாக கடைப்பிடிக்க உறுதி எடுப்போம்.

எம் அயலில் யாராவது பசித்திருந்தால் அவர்களுக்கு இயன்றவரை உதவுவோம். சமூகத்தின் நலிவுற்ற பிரிவினராகிய முதி யோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளி களின் நலனில் அதிக கவனம் எடுப்போம்.

உள்ளம் பெரும் கோயில் எனும் தத்து வத்தை உணர்ந்து ஆலய புறவழிபாடுகளை இக்கொடிய தொற்றுக் காலத்தில் தவிர்த்து உள்ளன்போடு எம் இல்லங்களிலிருந்து தாய் தந்தையினரின் ஆசீர்வாதத் தோடு எமது வழிபாடுகளை எளிமையான சமய சம்பிரதாயங்களுடன் கடைப்பிடிப்போம்.

மருத்து நீர் போன்றவற்றை எமக்கு வீட்டில் கிடைக்கும் மூலிகை இலைகள் கொண்டே தயாரிப்போம். இந்த காலத்தில் புத்தாடை புனைதல் உட்பட அனைத்து ஆடம்பரங்களையும் தவிர்ப்போம்.

பல ஆலயங்களும் அமைப்புக்களும் தன்னார்வலர்களும் ஆற்றி வரும் நிவாரணப் பணிகள் மனத்திற்கு நிறைவை தருகின்றன.

அவை மலரும் புத்தாண்டிலும் இன்னும் வீச்சுடன் இக்கொடிய நோய் விளைவுகள் முடியும் வரை தொடரப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைத்து சைவ சமயிகளும் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றோம்.

அன்பே உருவான சிவப்பரம்பொருள் இக்கொடிய துயரத்திலிருந்து எம்மை விடுவித்து எம் எல்லோர் மனங்களிலும் அன்பும் அறமும் ஓங்க செய்ய வேண்டும் என இம் மலரும் புத்தாண்டில் இலங்கையின் சைவ ஆதீனங்களின் குருமுதல்வர்களாகிய நாம் கூட்டாக உருக்கமான பிரார்த்தனையுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link