“நாம் வரும்வரை வீட்டில் இருங்கள்”
Share
கூட்டுறவுத் திணைக்களத்தால் அபி எனதுரு கெதர இன்ன அதாவது நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட் டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக் கப்பட்டது.
இந்தத் திட்டம் நேற்று முன் தினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரி வித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், அபி எனதுரு கெதர இன்ன (நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்) என்ற வேலைத் திட் டம் நேற்று முன்தினம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பெறுமதியைக் கொண்ட உலர் உணவுப் பொருட்கள் உள்ளடங் கிய பொதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலை பேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்கு கொண்டு வரு வதற்கான நடைமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.