தீக்காயத்துக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு
Share
தீக்காயத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த முகமது சிராஜ் (வயது-30) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவராவார்.
கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்சிய போது மண்ணெண்ணெய் போத்தல் தவறிவிழுந்ததில் தீக்காயத்துக்குள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் இறப்புத் தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.