தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதியை அழையாதீர்
Share
விசேட நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட விழாக்களுக்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் நலனுக்காக அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்றாட உத்தியோகபூர்வ கடமைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதால், விழாக்கள், பரிசு வழங்கல், திருமணங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எதிர்பார்க்காத காரணத்தால் அவ்வாறான நிகழ்வுகளுக்கு அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதுள்ள மரியாதை காரணமாக தமது வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் கலந்து சிறப்பிக்குமாறு அவர் அழைக்கப்படுகிறார்.
பொதுமக்களுக்கும் அவருக்கும் இடையில் உள்ள பிணைப்பை அவர் பெரிதும் மதிக்கின்றார்.
அப்படியிருந்தும், உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பால் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு மணித்தியாலங்களையும் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக தியாகங்களை செய்ய ஜனாதிபதி தீர் மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.