சாவகச்சேரியில் சக்தி வாய்ந்த நிலக்கண்ணிவெடி
Share

கவச வாகனங்களை தகர்க்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடி ஒன்று சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வளவு ஒன்றில் குழி தோண்டும்போது அங்கு சந்தேகத் திற்கிடமான பொருள் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கி யுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட நிலக்கண்ணிவெடியை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.