Type to search

Local News

கொரோனா வைரஸால் யாழைச் சேர்ந்த தம்பதியர் கனடாவில் உயிரிழப்பு

Share

கனடாவில் வசித்து வந்த தமிழ் தம்பதியொன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்ப ராணி நாகராஜா (வயது-56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது குடும்பத்தினரே கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தனர்.

பிரம்டன் வைத்தியசாலையில், இவரது கணவர் நாகராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கணவர் நாகராஜாவும் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர்களது 3 பெண் பிள்ளைகளும் வீட்டில் சுயதனிமைப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் பல தமிழர்கள் கொரோனா தொற்றில் உயிரிழந்து வரும் நிலையில், தம்பதிகளே கொரோனா தொற்றினால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link