Type to search

Local News

கொரோனா அபாயம் முழுமையாக நீங்கவில்லை

Share

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் நேற்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனோ வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவரையில் 17 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனைகளில் இனங்காணப்பட்டுளள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த வர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் தற்போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் நால்வரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதே போல யாழில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற மேலும் சிலரும் குணமடைந்து வருகின்ற நிலையில் அவர்களும் விரைவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.

யாழில் தற்போது ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் சமூகத்திற்குள் தொற்று பரவவில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் கொரோனோ ஆபத்து நீங்கிவிட்டதாக கருதமுடியாது.

எனவே ஊரடங்கு தளர்த்தப் பட்டிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல் களைப் பின்பற்றி பொது மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும்.

அதனூடாகவே தொற்று ஏற் படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link