கசிப்புடன் ஒருவர் கைது
Share
உரும்பிராய் கிழக்குப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.
இதேவேளை மதுபானசாலைகள் பூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி ஆங்காங்கே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.