Type to search

Local News

ஒரே நாடு என்ற கொள்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்

Share

ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக் கப்படும். மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப் பதோடு பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கான கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

எம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம்.

19ஆவது அரசி யலமைப்பு நீக்கப்பட்டு புதிய அரசிய லமைப்பு உருவாக்கப்படும்.

புதிய அரசியலமைப்பில் பிரதான மாக தேர்தல் முறைமையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

அரசியலமைப் பிற்கு அமைய ஒரு மித்த நாட்டில் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரச நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனை நிச்சயம் பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link