Type to search

Local News

இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையை முறையாக பூர்த்தி செய்துள்ளனர்

Share

இந்தியாவிலிருந்து வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 341 பேரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறையாக பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வழங்கிய உறுதிப்பத்திரத்தை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளதாக மினுவாங் கொடை ஆடை தொழிற்சாலை தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் ஆடை தொழி ற்சாலை நிர்வாகம் அந்த அறிக் கையில் மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது ,

341 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஜூன் 25, ஓகஸ்ட் 8 மற்றும் செப்டெம்பர் 22 ஆகிய திகதிகளில் மூன்று தனித்தனி விமானங்களில் (உhயசவநசநன கடiபாவள) இந்தியா – விசாகப்பட்டினத்திலுள்ள எமது கிளையிலிருந்து நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு வந்த அனைவரும் தனிமைப்படுத்தலை முறையாக பூரணப்படுத்தினார்கள் என்பதை உறுதிப்படுத்து கின்றோம்.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலை வர், சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் என்போர் கையெழுத்திட்ட சான்றிதழ் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர் ந்து முதல் இரண்டு விமானங்களில் வந்தவர்கள் தத்தமது பிரதேச பொது சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் சுய தனிமைப் படுத்தலையும் முன்னெடுத்துள்ளனர்.

இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 22 ஆம் திகதி வந்தவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். அவர்களின் சுய தனிமைப் படுத்தல் நிறைவடைந்தவுடன் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே இவ்விடயம் தொடர்பில் விசாரிக்கும் எந்தவொரு அரசாங்க அதிகாரியின் சோத னைக்கும் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் கடந்த இரு மாதங்களில் இந்தி யாவிலிருந்து பயணிகள் எவரும் மினுவாங்கொடை தொழிற்சாலைக்குள் வரவில்லை.

அத்துடன் தொற்றுக்குள்ளான ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் குணமடைவ தற்கு தேவையான உதவிகளை வழங்கத்தயாராகவுள்ளோம்.

அதற்கமைய ரம்புக்கனையிலுள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையொன்று 300 படுக்கைகளைக் கொண்ட தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link