அனலைதீவுப் பகுதி முடக்கம்
Share
யாழ்.அனலைதீவுப் பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பிரிவினரால் முடக்கப் பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவ ட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவுப் பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிர தேசம் சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நட மாடியதன் காரணமாக காரை நகர் பிரதேசத்தில் அடை யாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனாத் தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.
யாழ்.மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுவினுடைய தீர்மானத்தின்படி சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாகவும் அதே நேரத்தில்; மாகாண சுகாதாரப் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்தியப் பணிப்பா ளர்கள் ஆகியோரது அறிவுறுத்தலின்படி சில முற்பாதுகாப்பு ஏற்பாடுகளை நடை முறைப்படுத்தும்படி வேண்டியிருக்கின்றோம்.
தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை வெளியூரில் இருந்து வருகை தந்து இங்கே தொழில் புரிகின்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ஒரு அறிவுறுத்தலினை வெளியிட்டுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வடக்கு மாகாணத்திற்கு மேற்கு மாகாணங்களிலிருந்து இரு வாரங்களுக்குள் வருகை தந்தோர் தொடர்பான விபரங்களைச் சேகரித்து அவர்களுக்குரிய பி.சி.ஆர்.பரி சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்றுக் காலையில் அனலைதீவு பகுதியில் இரண்டு நபர்கள் மஞ்சள் கடத்தலில் தொடர்புபட்ட வகையிலே கடற் படையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் சென்ற இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றது. அதேநேரத்திலே தற்காலிகமாக தீவகத்துக்கான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புங்குடுதீவு பகுதியில் கொரேனாத் தொற்றுக்குள்ளான நபர் பயணம் செய்த பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பில் விபரங்களைக் கோரியிருந்தோம். ஆனால் 15 பேர் மாத்திரமே தமது பதிவுகளை சுகாதாரப் பிரிவினரிடம் மேற்கொண்டுள்ளார்கள்.
எனவே ஏனையவர்களும் தாமாக முன் வந்து தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.