யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா இல்லை
Share
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இராணுவச் சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள், பருத்தித்துறை மூதாட்டி உள்ளிட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.