பொதுத் தேர்தலை நடத்தவே அலரி மாளிகையில் கூட்டம் மகிந்த ராஜபக் திட்டவட்டம்
Share
பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களு டனான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.
எனது அழைப்புக் கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம்.
கூட்டத்தைப் புறக்கணி க்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தமாட்டேன்.
பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்தே இங்கு கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.