பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனு
Share
பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமானது.
இதன்போது மனுதாரர்களில் ஒருவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது வாதங்களில், மக்கள் உரிமையையும் அவர்களின் இறையாண்மையையும் பாதுகாக்கவே மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியதாக கூறியிருந்தார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்று சுகாதார நிபுணர்கள் பரிந்து ரைத்ததாக அவர் கூறினார்.