Type to search

Local News

தாவடியில் தனிமைப்பட்டோருக்கு கொரோனா இல்லை

Share

தாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் பரிசோத னைகளுக்குட்பட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனாத் தொற்றில்லையென நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொற்றுள்ளதென அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்டுப் பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத் தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஆய்வுகூடப் பரிசோதனைகளிற்கமைய குறித்த 18 பேருக்கும் தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் (நேற்று) வெளியாகும் என செய்தி வெளியானது.

தாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 பேரில் மூவரே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த 18 பேருக்கும் கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனை யின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் அச்சத்தினை ஊட்டும் வகையில் செயற்படக்கூடாது எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link