சிறீதரனிடம் கிளிநொச்சி பொலி ஸார் வாக்குமூலம்
Share
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவி சாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் நேற்று கிளிநொச்சி பொலி ஸார் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்தனர்.
நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக் கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பில் நேற்று பொலிஸார் விசா ரணைக்காக அழைத்திருந்தனர்.
இந் நிலையில் இருவரிடமும் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.