Type to search

Local News

கொரோனா வைரஸ் அபாயம் இலங்கையில் நீங்கவில்லை

Share

கோவிட் – 19 கொரோனா வைரஸடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது

என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“கோவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற காரணிகளை கூற ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டினை கூறுகையில் அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்றுள்ள சூழலில் வாழ மக்களை வலியுறுத்தி வருகின்ற கருத்துக்களை நாம் அவதானித்த வண்ணமே உள்ளோம்.

மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு வீடுகளில் இருக்க முடியாது என்பது உண்மையே, எதிர்காலத்தில் அவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தாக வேண்டும்.

ஆனால் கொரோனா வைரஸடன் இணைந்து வாழக்கூடிய நிலையில் இன்றைய சூழல் நாட்டில் நிலவவில்லை. வியட் நாம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் கோவிட் – 19 இன் வீரியம் குறைவடைந்து விட்டது.

அவர்களின் சுகாதார அட்டவணையினை பார்க்கையில் தாக்கம் குறைந்த வண்ணமே செல்கின்றது. அவ்வாறான சூழலில் மக்களை கொரோனா வைரஸ் சூழலிலும் வாழ அனுமதிக்க முடியும்.

ஆனால் இலங்கையின் நிலைமை அவ்வாறு அல்ல. இந்தியா, அமெரிக்கா, தென்னா பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிலைமையில்தான் இலங்கையும் உள்ளது.

கொரோனா தாக்கம் குறித்த இலங்கையின் அட்டவணையை எடுத்துப் பார்த்தால் அதில் ஏறுவரிசையில்தான் நோய்த்தாக்கம் காட்டுகின்றது.

அவ்வாறு இருக்கையில் இலங்கை மக்களை கொரோனாவுடன் வாழ அனுமதிக்க முடியாது.

அவ்வாறு அனுமதித்தால் அடுத்த வாரங்களில் நிலைமை மிக மோசமானதாக அமையும்.

இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை நெருக்கடிக்குள் தள்ள நினைக்கும் அனைவரும் முட்டாள்கள் என்றே நாம் கூறு வோம். கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என கூறும் நபர்களின் கருத்துக்களை நாம் வன்மையாக கண்டிக் கின்றோம் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link