இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் என்ன செய்ய வேண்டும்?
Share
இன்று இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, எமது சுகாதார நிலை சம்பந்தமாகவும் எமது பொருளாதார நிலை சம்பந்தமாகவும் எமக்கு என்ன நடக்கப் போகிறது, நாம் என்ன செய்ய வேண் டும்? என்பது சம்பந்தமாக சிந்திப் பது பயனுடையதாக அமையும்.
அண்மையிலே ஒருவரை சந்தித்தேன், அவருடன் கதைத்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் சொன்னார் இந்த போக்குவரத்து பெட்ரோல் பிரச்சினை வந்த பொழுது நான் எனது மோட்டார் சைக்கிளை அப்படியே வைத்து விட்டேன். இப்பொழுது துவிச்சக்கர வண்டியை பாவிக்கிறேன், எனக்கு பெட்ரோல் காசு மிச்சம். இந்த காஸ் தட்டுப்பாடு வந்த பிறகு இப் பொழுது நான் எனது வீட்டில் இருக்கும் விறகிலே சமைக்க வெளிக்கிட்டு விட்டேன் எனக்கு காஸ் காசும் மிச்சம், அத்துடன் இந்த பவர் கட்வாற படியால் எனக்கு இப்ப கரன்ட் பில்லும் நல்லா குறைந்து விட்டது எனக்கு அந்த காசும் மிச் சம் என்று சொன்னார்.. அவருடைய ஊக்கமும் அவருடைய சிந்தனையும் அவருடைய திட்ட மிடலும் எனக்கு மிகவும் மகிழ்ச் சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது.
ஒன்று மட்டும் நிச்சயம் இந்த சிக்கல் நிலை ஒரு நீண்ட காலத் துக்கு நீடிக்கப் போகிறது அதற்கான தயார்படுத்தல்கள் மிகவும் முக்கி யமாக தேவையாகி நிற்கிறது. அதாவது எமது உடல் உள சமூக ஆரோக்கிய நன்னிலையை பேணு வதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலே தெளிவாக இருக்க வேண்டும்.
முக்கியமாக உணவிற்கும், மருந்துகளுக்கும், பரிசோதனைகளுக்கும், போக்கு வரத்துக்கும், பணத்திற்கும் சிக்கல் நிலை எழுந்திருக்கும் இந்த சந் தர்ப்பத்திலே எம்மையோ மற்றவர் களையோ காயப்படுத்தும் ஆபத் தான நிலைமைகளை தவிர்த்து விடுவது மிகவும் முக்கியமானதா கும்.
அத்துடன் நாங்கள் வாகனம் ஓட்டும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நாம் காயப்பட்டு விட்டால் அது எமக்கு மாத்திரமல்ல எமது குடும்பத்திற்கும் தற்போதைய நிலையிலே பெரும் சுமையாக அமைந்து விடும். அத்துடன் நாம் நோய் வாய்ப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் வரிசை யில் நிற்கும் பொழுது இன்னு மொரு கொரோனா அலை ஏற் படலாம் என்ற விடயத்தையும் கருத்திலே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போட்டு கொள் ளாதவர்கள் அதனை உடனடியாக போட்டுக் கொள்வது நல்லது, எமக்கு நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். எமது அநாவசியச் செலவுகள் அனைத் தையும் முற் றாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் குடிப்பதற்கும் புகைப் பதற்கும் வேண்டத்தகாத விடயங்களுக்கும் பணம் செலவு செய்வ தையும் முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டினுடைய பொருளா தார நிலை நமது கைகளில் இல்லை. நாம் எமது குடும்பத்தினுடைய பொருளாதார நிலையை தற்காத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண் டும் என்பதிலேயே மிகவும் கவன மாக இருக்க வேண்டும். இதிலே ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுவது மிகவும் முக்கியமானது.
அதிக விலை கொடுத்து சத்துமா பேணிகளையும், சத்துக் குளிசைகளையும், ரொனிக்குகளையும், வாங்குவதை நிறுத்தி விடுவது நல்லது. எமது உள்@ர் உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உற்பத்திப் பொருட்கள் என்று சொல் வோமாக இருந்தால் வாழைப் பொத்தி, தயிர், மோர், தவசி முருங்கை, கொய்யாப்பழம், முட்டை, மீன், வாழைப்பழம், மற்றும் பனங் கிழங்கு, நுங்கு போன்ற பொருட் களை நாங்கள் வாங்கிப் பாவிக் கலாம். இவை மிகவும் சத்துள் ளவை ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானவை.
நுங்கானது மிகவும் புரதச்சத்து நிறைந்த ஒரு ஆரோக்கிய பானம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கச்சான் கடலை மிகவும் ஒரு ஆரோக்கியமான உணவு. வீட்டிலே சின்னத் தோட்டம் ஒன்று அமைக்க வேண்டும். ஐந்து, ஆறு ஊர் கோழிகளை வீட்டிலேயே வாங்கிவிடலாம் அவை இயற்கை யாக உணவு உண்டு முட்டையி டும், எமக்கு இட வசதி இருக்கு மானால் நாங்கள் இதை கருத்தில் எடுக்கலாம். அல்லது ஒரு அடைக் கோழிக்கு முட்டையை அடைக்கு வைத்தால் இது எமது புரதத் தேவையை நிவர்த்தி செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பப்பா விதைகளை காணியிலே விதை த்து விட்டால் பப்பாமரம் வளர்ந்து காய்க்கும் அது மிகவும் பிரயோச னமாக இருப்பதுடன் எமது சூழலும் பசுமையடையும். மற்றும் அகத்தி முருங்கை நடுவோமாக இருந்தால் இயற்கையாகவே எமக்கு சிறந்த சத்தைத்தரும்.
நாங்கள் மனதை சோரவிடாமல் பதட்டப்படாமல் இயலு மானவரை வழமையான நடவடிக் கைகளை வழமைபோல செய்வ தற்கு முயற்சி எடுக்க வேண்டும். எந்தப் பொருட்களையும் வீணடிப் பதை தவிர்த்து விட வேண்டும். அது உணவுப் பொருட்களாக இருந்தால் என்ன மருந்துப் பொருட்களாக இருந் தால் என்ன…
ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நீரி ழிவு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருந்துக் குளிசைகள் வேலை செய் யவில்லை நாங்கள் உங்களுக்கு இன்சுலினுக்கு மாற்றுவோமா? என்று அவருடன் கலந்துரையாடும் போது அவர் சொன்னார் நான் மெற்போமின் என்ற குளிசையை கிளினிக்கில் தந்தாலும் பாவிக்கிறதில்லை. பக் கத்து வீட்டாக்கள் சொன்னார்கள் இந்த மெற்போமின் குளிசையை பாவித்தால் கிட்னி பழுதாய்ப்; போகும் என்று சொல்லி. அதனால் நான் கடந்த ஐந்து வருடங்களாக பாவிக்க வில்லை என்று சொன்னார்.
இந்த ஐந்து வருடகாலமும் அவருக்கு 7300 மெற்போமின் குளிசைகள் வழங்கப்படிருக்கிறது. 7300 மாத்தி ரைகளும் வீணடிக்கப்பட்டிருகிறது. இந்த மெற்போமின் என்ற மாத்தி ரைதான் உடம்பை பாதுகாக்கும் விடயத்தில் ஆகத்திறமான மாத் திரை, மருந்துகள் வீணடிக்கப்படுவது எங்களது மனச்சாட்சிக்கு விரோதமான செயல். எனவே இந்த இக்கட்டான நிலையில் நாம் மருந் துப் பொருட்களையோ உணவுப் பொருட்களையோ வீணடிப்பதை தவிர்த்துவிட வேண்டும்.
ஒரு மருந்து பாவிக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் கிளி னிக்கில் சொல்லி எனக்கு இந்த மரு ந்து வேண்டாம், எனக்கு பாவிக்க விருப் பமில்லை, என்று சொல்லி விட்டால் அதை நாங்கள் வேறு ஒருவருக்கு கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
பரிசோதனைகளுக்கும், மருந் துக்களுக்கும் தட்டுப்பாடு நிலவும் இந்தக் காலத்திலே மருத்துவம னைக்குப் போகும் போது உங்க ளுடைய பழைய மருத்துவக் குறிப் புகளையும், கொப்பிகளையும் கொண்டுபோகவேண்டும். இது உங்களுடைய நோய் நிலை சம்பந் தமான தெளிவான முடிவுகளை தாமதமில்லாமல், கண்டறிவ தற்கு உதவியாக இருப்பதுடன் அநா வசியமான சோதனைகளை செய்வ தையும் அநாவசியமான மருந்து கள் தரப்படுவதையும் தவிர்த்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்
ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது குடும்பவரவு, செலவை கருத் தில் கொண்டு தமது பொருளாதார நிலையை திட்டமிட்டு செயற்பட வேண்டும். பெரிய முதலீடுகளை ஆரம்பிப்பதை தற்போதைய காலத் திலே தவிர்த்து விடுவது நல்லது. இது நீண்டகால பிரச்சினை. எனவே எமது வழமையான நட வடிக்கைகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு நாங்கள் தொடர் முயற்சியை எடுக்க வேண்டும்.. இந்த சவாலையும் நாம் வெற்றிகர மாக எதிர்கொள்வதற்கு ஆண்டவன் எமக்கு உறுதுணையாக இருப்பார் என்பதை மனதிலே கொள்ளு வோம்.
Dr.சி. சிவசுதன்
பொது வைத்திய நிபுணர்