Type to search

Headlines

தேன் உடற் கலங்களை பாதுகாக்க உதவுகிறது.

Share

தேன் மிகவும் சுவையானது. அதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை தேனுடன் ஒப்பிட்டு தேனிலும் இனியது தமிழ் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பண்டைய தமிழ் மருத்துவ முறைகளிலே தேன் ஒரு முக்கிய பங்கு வகித்திருக் கிறது. இது மருத்துவத் துறையில் 5000 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்துணை அதீத இனிப்புச் சுவை கொண்ட தேன் உண்மையிலேயே உடல் நலத்துக்கு பாது காப்பானதா? இது சம்பந்தமான ஆய்வுகள் ஏதாவது நடத்தப்பட்டி ருக்கின்றனவா? நீரிழிவு உள்ள வர்கள் இதனை பாவிக்கலாமா? என்பது போன்ற பல வினாக்கள் எம்முன்னே எழுகின்றன.

தேன் என்றால் என்ன? அதில் என்னென்ன பதார்த்தங்கள் அடங்கி இருக்கின்றன என்பதை நாம் முதலில் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

தேனிலே பிரக்ரோஸ், குளுக் கோஸ், மோல்ரோஸ், சுக்கு ரோஸ் எனப்படும் 4 வகையான வெல்லங்கள் காணப்படுகின் றன. அத்துடன் இத் தேனிலே புர தத்தின் அடிப்படை அலகுகளான அமினோ அமிலங்கள் காணப் படுகின்றன. இவற்றிற்கு மேல திகமாக தேனிலே பெருமளவு விற்றமின்கள் செறிந்து காணப் படுகின்றன. விற்றமின் B2,B4,B5, B6, B11 விற்றமின் K, விற்றமின் C போலிக்கமிலம் போன்ற பல விற்றமின்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன.

இவற்றோடு பல முக்கியமான கனியுப்புக்களையும் இந்தத் தேன் உள்ளடக்கி இருக்கிறது. இரும்பு, நாகம், கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், செலேனியம், மங்க னீசு போன்ற பல கனியுப்புக்களின் கலவையாகவும் இது காணப்ப டுகின்றது. இவை அனைத்தை யுமே தேன் உள்ளடக்கி இருப்ப தால் இது உலகிலே கிடைக்கக் கூடிய இயற்கையான விற்றமின் ரொனிக்குகளில் முதல் தரமான தாக கணிக்கப்படுகிறது.

தேனிலே நோய்க் கிருமிகளை கொல்லும் தன்மையும் அவற்றின் பெருக்கத்தை தடுக்கும் தன்மை யும் இருப்பது பல ஆய்வுகளின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட் டிருக்கிறது. காயங்களுக்கு இதனை பூசி விடும் பொழுது இது தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஒரு கவசமாகவும் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாகவும் தொழிற்படுவதாக ஆய்வுகள் காட்டி நிற்கின்றன.

அத்துடன் தேனானது ஒரு அன்ரி ஒக்சிடென்ற் ஆகத் தொழிற்பட்டு உடற் கலங்களைப் பாதுகாக்க உதவுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தேன் சம்பந்தமான ஆரம்ப ஆராய்ச்சிகள் குருதியிலே HDL எனப்படும் நல்ல கொலஸ்ரோலை அதிகரிப்பதற்கும் trigliceride எனப்படும் தீய கொழுப்பை குறைப் பதற்கும் தேன் உதவி புரிகின்றது என்பதை காட்டி நிற்கின்றது.

உடலில் ஏற்படும் அழற்சி பல நோய்களுக்கு வித்திடுகின்றன. தேன் Inflammation என்று சொல்லப்படுகின்ற உடலில் ஏற்ப டும் அழற்சிகளைக் கட்டுப்படுத்து கின்றது. இதன் காரணமாக இது நாட்பட்ட வரண்ட இருமலையும் தொண்டை அழற்சியையும் கட் டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரு கிறது. அத்துடன் குடலில் ஏற்படும் அழற்சிகளை குறைத்து வயிற் றோட்டத்தை கட்டுப்படுத்த உத வுகிறது. ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப் பது நல்லதல்ல.

நீரிழிவு உள்ளவர்களுக்கு தேன் சிறந்ததா? என்பது சம்பந்தமாக பல் வேறுபட்ட ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்த வண்ணம் இருக்கின் றன. நீரிழிவு உள்ளவர்களில் இரத்தத்தின் கொழுப்பை குறைப் பதற்கும் இன்சுலீனின் சுரப்பு வீதத்தை அதிகரிப்பதற்கும் தேன் உதவுகின்றது. ஆனால் அதிகளவு தேனை உட்கொண்டால் நீரிழிவு உள்ளவர்களிலே குருதி குளுக் கோஸின் அளவு அதிகரிப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பானது அதனை ஒத்த சீனி உட்கொள் ளும் பொழுது ஏற்படும் அதிகரிப் பினும் பார்க்கக் குறைவாக காணப்படுகிறது.

எனவே நீரிழிவு உள்ளவர் கள் அதிகளவு தேன் உட்கொள் ளுவது பாதுகாப்பானதா? என்பது பற்றி விரிவான ஆய்வுகள் பல செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் தேனானது சீனியிலும் பார்க்க பல மடங்கு பாதுகாப்பானது என்பது தெளி வானது, உறுதியானது.

உலக அளவில் வருடம் தோறும் 1.3 million தொன் தேன் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. காரணம் இதனை உண வாகவும் மருந்தாகவும் விற்ற மின் ரொனிக் ஆகவும் வெளிப் பூச்சு மருந்தாகவும் பலராலும் பாவிக்கப்பட்டு வருவதால் இதன் தேவை அதிகமாக இருக்கிறது.

எமது பிரதேசங்களிலே தேன் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. இது ஊக்குவிக்கப்பட வேண்டும். பயிர்க ளுக்கு மருந்து விசிறுவது தேனீககளை அழித்து விடுகின்றது.

ஒரு விவசாயி தனது தோட் டத்திற்கருகே தேனீ வளர்க்கிறான் என்றால் அவன் ஒரு இய ற்கை விவசாயி என்பதை உறு திப்படுத்த வேறு சான்றுகள் தேவைப்படாது. மருந்தடிக்கும் சூழலில் தேனீ வளர்க்க முடியாது.

எனவே தேனீ வளர்ப்பு மரு ந்து தெளிக்காத பயிர்ச் செய்கை யையும் மறைமுகமாக ஊக்கு விக்கும். எனவே தேனீ வளர் ப்பில் நாம் கூடிய அக்கறை செலுத்தி இயற்கையை பாதுகாப்ப துடன் தேன் உற்பத்தியையும் பெருக்க முயற்சி எடுக்க வேண் டும்.

Dr. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link