வட மாகாணத்தில் கொரோனா உக்கிரம் : யாழில் 35 பேர் உட்பட வடக்கில் 72 பேருக்கு தொற்று
Share
- நெல்லியடியில் எழுமாற்றுப் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று.
- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் எழுமாற்றுப் பரிசோதனை யில் 6 பேருக்கு கொரோனா.
- சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தொற்று.
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 72 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நேற்றைய தினம் ஆயிரத்து 18 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 35 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 பேருக்கும் (16 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்தவர்கள்) கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.