Type to search

Headlines

தடைகளைத் தகர்த்தெறிந்து முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகள் உறவுகளுக்கு அஞ்சலி

Share

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தைத் தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் இராணுவம் மற்றும் பொலிஸார் பலத்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும்கூட வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


அத்துடன் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற படுகொலையின் நினைவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்கத்தால், ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்துக்கு அமைவாக, முதலாவது ஆலமரக் கன்று ஒன்றினை குறித்த நிகழ்வின் போது வேலன் சுவாமிகள் நாட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link