Type to search

Headlines

கோவிட்டால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண் மரணம்

Share


காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மேலுமொரு கர்ப்பிணித் தாயொருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.


கோவிட் தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


44 வயதான பெண், சில நாட்களுக்கு முன்பு மயக்க நிலையில் இருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்தார்.


அந்தப் பெண் சுமார் 11 நாட்கள் எக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link