கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் முதல் முறையாக ஓட்டமாவடியில் அடக்கம்
Share
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம். என்று சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய நேற்று சடலங்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒன்பது சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.