கொரோனாத் தொற்றினால் மேலுமொரு முதியவர் யாழில் உயிரிழப்பு
Share
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலுமொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடுப்பிட்டியைச் சேர்ந்த 89 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் குடாநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.