ஊரடங்கு தொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை
Share

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இன்று (நேற்று) இரவு 11 மணி முதல் நாளை (இன்று) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சில சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.