கொரோனா விதிகளை மீறி குருந்தூர்மலையில் விகாரை புனருத்தாபனம் இன்று ஆரம்பம்
Share
கொரோனா விதிகளை மீறி குருந்தூர்மலையில் விகாரை புனருத்தாபனம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இரவோடிரவாக பிரித்ஓதல் நிகழ்வும் இடம்பெற்றது
அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் முல்லைத்தீவு தண்ணி முறிப்பு குருந்தூர்மலை பகுதியில் கோவிட் – 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்றது.
பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதி பால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.