Type to search

Headlines

90.8 மில்லி மீற்றர் மழை யாழ்.மாவட்டத்தில் பதிவு

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திரு நெல்வேலியில் அமைந்துள்ள பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.

“இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளி மண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மணித்தியாலங்களுக்கு தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியிலிருந்து நேற்றுக் காலை 8.30 மணி வரை 55.4 மில்லி மீற்றர் மழையும் நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரையில் 22.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

அச்சுவேலிப் பகுதியில் 92.9 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகி யுள்ளது. அதேபோல் தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 84.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி வாகியுள்ளது.

இந்த வருடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று வரை யாழ். மாவட்டத்தில் 343.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link