2,327 கிலோ கிராம் கேரள கஞ்சா இவ் வருடத்தில் கைப்பற்றப்பட்டது
Share
வடக்கில் இவ்வருடம் 2,327 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் போதைப் பொருள் கடத்தல் வடக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு கடற்படை கட்டளை தலைமையகம், வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் அதிகளவிலான போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 2096 கிலோ கிராம் கஞ்சா கடற்படையினரால்கைப்பற்றப்பட் டுள்ளது.
எனினும் இவ் வருடம் இன்றைய தினம் (நேற்று) வரை 2327 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.