105 பேருக்கு மேலும் கொரோனா உறுதி
Share
நாட்டில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை யில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 103 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை மினுவாங்கொட கோவிட் – 19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 628ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றி லிருந்து இதுவரை மூவாயிரத்து 306 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 307 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றி னால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.