Type to search

Headlines

ஹெரோயினுடன் கொக்குவிலில் ஒருவர் கைது

Share

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளு டன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலில் வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது வீட்டில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது 530 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link