வீடு திரும்பிய குடும்பஸ்தர் திடீர் மரணம்
Share

ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை, சிதம்பரா வடக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேந்த வரதமுத்து சாமிநாதன் (வயது-58) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு கணவனும் மனைவியும் சென்றுள்ளனர்.
அங்கு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து ஊறணி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.