விக்னேஸ்வரனின் பிரசாரத்தில் மோப்ப நாய் உதவியுடன் பொலி ஸார் சோதனை
Share
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலை மையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று வல்வெட்டித் துறை ரேவடி உல்லாசக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மேடை மற்றும் கதிரைகள் என்பன மோப்ப நாய் மற்றும் கருவிகள் கொண்டு பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண் டதுடன் படையினரும் குவிக்கப்பட்டு கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.