வாள்முனையில் 16 பவுண் நகை மூளாயில் கொள்ளை
Share
வாள்முனையில் 16 பவுண் நகையும் 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மூளாய்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மூளாயில் அதிகாலை வேளை வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை அறுவர் அடங்கிய குழுவொன்று அங்கு சென்று கதவைத் தட்டித் திறக்குமாறு கூறியது.
கதவு திறந்ததும் வாளினைக் காட்டி மிரட்டி நகை பணம் அனைத்தும் எங்கே வைத்துள்ளீர்கள் எனக் கேட்டது.
வீட்டில் உள்ளவர்கள் உயிருக்குப் பயந்து நகை இருக்கும் அலுமாரியையும் அதன் திறப்பு இருக்கும் இடத்தினையும் காட்டியுள்ளனர்.
உடனே வீட்டு மின்விளக்குகளை அவர்களே ஒளிரச் செய்துவிட்டு அலுமாரியைத் திறந்து நகையையும் பணத்தையும் எடுத்து விட்டு மேலும் எதுவும் உள்ளதா என இரண்டு அறைகளையும் சுமார் அரை மணித்தியாலம் சல்லடை போட்டுத் தேடிய பின்னர் அவ்விடத்தினை விட்டு வெளியேறினர்.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.