வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்ப மாகியது
Share
பாராளுமன்றத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நேற்று ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று மாலை உத்தரவிட்டது.
இந்நிலையிலேயே, வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.