Type to search

Headlines

வவுனியா பம்பைமடுவில் தனிமைப் படு த்தலில் இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

Share

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனி மைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிசரையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தி யோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் அண்மையில்கொண்டுவரப் பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டிப்பவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன் னெடுக்கபட்டு வருகின்றது.

குறித்த பரிசோதனையில் செவன கலவைச் சேர்ந்த வெலிசரை கடற்படை வீரர் ஒருவரின் தந்தையாருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link