வவுனியாவில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு
Share
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் கொலை என்ற ரீதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சடலத்தினை வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
சம்பவத்தில் க. இந்திரகுமார் (வயது – 75) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.