வழிபாடு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி
Share

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடத்துவதற்கு பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளையதினம் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக குற்றவியல் சட்டக்கோவையின் 106ஆவது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பம் ஒன்றினை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரியிருந்தனர்.
இன்றையதினம் இதனை ஆராய்ந்த நீதிபதி பொலிசாரால் கோரப்பட்ட குறித்த தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழா நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
குறித்த வழக்கில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில்10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.