வலம்புரி அலுவலக செய்தியாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
Share

வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன் (வயது – 20) இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணி யளவில் யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றது.
பணி முடிந்து வலம்புரி அலுவலகத்தில் இருந்து ஜனார்த்தன் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரெழுவுக்குப் புறப்பட்ட வேளை யாழ்ப்பாணம் பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையால் மோட்டார் சைக்கிளில் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு வந்த இருவர் அவரை இடைமறித்து கொட்டன், கம்பிகளால் தாக்கியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கினர்.
சம்பவத்தை அறிந்து அயல் வீடுகளில் இருந்தவர்கள் திரண்டபோது, தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.