Type to search

Headlines

வர்த்தகரிடம் அன்பளிப்பு வாங்கச் சென்ற 3 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

Share

நோன்புப் பெருநாளை முன்னிட்டு வர்த்தகர் ஒருவரிடம் பணத்தினை அன்பளிப்பாக வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் கொரோனா வைரஸின் அபாய வலயத்துக்குள் இருக்கும் கொழு ம்பு மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,
நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் வர்த்தகர் ஒருவரினால் அன்பளிப்பாக நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த பணம் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையை சேர்ந்த வர்த்தகர் மாளிகாவத்தைக்கு பணி நிமித்தமாக செல்ல வேண் டும் என மாத்திரம் கூறி அனுமதி பெற்றுள்ளார்.

மாளிகாவத்தையில் உள்ள அவரது வாகன உதிரிப்பாகங்கள் களஞ்சியப்படுத்தும் இடத்திற்கு குறித்த வர்த்தகர் மேலும் நால்வருடன் நேற்றுக் காலை சென்றுள்ளார்.

அங்கு சென்றவர்கள் மக்களை ஒன்று கூட்டி நேற்று பிற்பகல் பணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதன்போது அவ்விடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

பணம் வழங்க ஆரம்பித்த பின்னர் யாரும் வெளியே செல்ல வேண்டாம் இரண்டாவது முறையும் பணம் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்ட மக்கள் முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

கூட்டநெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்ததுடன் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றின் ஆபத்து உள்ள நிலையில் எவ்வித அனுமதியும் பெறாமல் இவ்வாறு மக்களை ஒன்று கூட்டியுள்ளனர்.

மக்களுக்கு இடையில் ஒரு மீற்றர் தூரம் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவிக் கப்பட்டதனை கண்டுகொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக வர்த்தகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூடிய இடம் ஒன்றிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link