Type to search

Headlines

வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கல் அதிகரிக்கின்றது

Share

இன அழிப்பு என்பது தமிழ் மக்களை கொல்வது மட்டுமல்ல, அதில் பல்வேறு பரிமாணங் கள் உண்டு. நாம் அறியாத பல வித இன அழிப்புக்கள் வடக்கு-கிழக்கில் தற்போது வரை அர ங்கேறிக்கொண்டே உள்ளன.

தமிழ் மக்களுக்கு இராணு வம் நன்மை செய்வதாகப் பாசாங்கு காட்டுவது ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே. அதற்காகவே அவர்கள் வன்னி மண்ணில் நிலை பெற்றுள்ளனர் என கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரு மான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி கிளிநொச்சி மாவட்டத் தையும் உள்ளடக்கியது என் பதை நீங்கள் அறிவீர்கள். எனவே எமது இரு மாவட்டங் களும் இந்தத் தேர்தலில் ஒரு மித்தே பயணம் செய்கின்றோம்.

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் கள் யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள். ஆகவே மிக விரிவான புலத்தையும் பரந்த ஒரு மக்கள் கூட்டத்தையும் உள்ளடக்கியே அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எனவே தகுந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உங் கள் கடப்பாடாக அமைகின்றது.

ஆகவே தான் மக்கள் மீது அன்பும் கரிசனையும் கொண்டவர்கள், ஊழலற்ற வெளிப்படை யான செயற்பாடுகளை வெளிக் காட்டுபவர்கள், மக்கள் யாவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து மனிதாபிமான சேவை ஆற்றக் கூடிய மனோபாவம் உடையவர்கள் என்று சகலவித மான நற்குணாதிசயங்களையும் கொண்ட பிரதிநிதிகளையே நீங்கள் யாவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

முன்னர் இருந்த பிரதிநிதிகள் தப்புக்கள் செய்திருந்தால் மீண்டும் அவர்களைப் பாராளு மன்றம் அனுப்ப வேண்டும் என்ற கடப்பாடு எவையும் உங் களுக்கில்லை என்பதை மற வாதீர்கள்.

எம்மைப் போன்ற ஒரு புதிய கட்சியின் வேட்பாளர்களுக்கு இம்முறை ஒரு சந்தர்ப்பம் அளி ப்பதில் தவறில்லை.

ஏற்கனவே உங்களில் பலருக்கு நாம் வடக்கு மாகாண சபையில் இருந்த போது பல சேவைகளை ஆற்றிக் கொடுத்துள்ளோம்.

அந்த நற்செயற்பா டுகளை நாம் உங்களுக்குத் தொடர்ந்தளிக்க உங்கள் வாக் குகள் எமக்கு மிகவும் அவசியம்.

முன்னர் உங்களை முதலமைச்சராகச் சந்தித்த நான் இப்பொழுது எமது மீன் கட்சி யின் வேட்பாளராகச் சந்திக்கின்றேன்.

தேர்தல் நடைபெறுகின்ற நாளன்று முதலில் மீன் சின் னத்திற்கு வாக்களித்து அதன் பின் வாக்கட்டையின் கீழே தரப்பட்டிருக்கும் 10 இலக்கங்க ளில் மூன்றைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும்.

இம்முறை எனது இலக்கம் 6. எம் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரதும் பெயரும் படமும் இலக்கமும் உங்கள் மத்தியில் கைத்துண்டு மூலம் நாங்கள் விநியோகித்துள்ளோம்.

அடுத்து நான் உங்கள் மத் திக்கு ஒரு சில முக்கிய விட யங்களைக் கொண்டு வர கட மைப்பட்டுள்ளேன். உங்களின் ஊடாக எமது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி பரவ வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அதாவது நாளுக்கு நாள் எம்மத்தியில் படையினர் தொகை அதிகரித்து வருகின் றது. எமது ஜனாதிபதி ஒரு முன்னைய இராணுவ வீரர்.

எனவே வருங்காலம் எப்படி அமையும் என்பதில் பலத்த கரிசனை பலர் மத்தியில் இப் பொழுது எழுந்துள்ளது.

இம்முறை நடத்தவிருக்கும் தேர்தல் சரியாக, முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்தப் படுமா? என்ற கேள்வி எழுந்துள் ளது. காரணம் கொரோனாவைச்சாட்டி இராணுவ பிரசன் னம் தற்போது அளவுக்கதிக மாக வடமாகாணத்தில் ஏற்பட வழி அமைத்திருப்பதே யாகும்.

2019 ஆம் ஆண்டு பெப்ர வரி மாதம் வெளியிடப்பட்ட போர் சார்ந்த சமநிலை என்ற சர்வதேச போர் முறைத் திறன் ஆராய்வு நிறுவனத்தின் அறிக் கைப்படி இலங்கையானது 2,55,000 செயலூக்க அங்கத் தவர்களைக் கொண்டிருந்தது என்றும் அதே காலகட்டத்தில் பிரித்தானியா 1,46,390 அங்க த்தவரையும் இஸ்ரேல் 1,68,550 அங்கத்தவரையும் பிரான்ஸ் 2,03,910 அங்கத்தவரையும் சவுதி அரேபியா 2,27,000 செயலூக்க அங்கத்தவர்களை யும் கொண்டிருந்தன என்றும் கூறுப்பட்டுள்ளது.

எனவே எமது சிறிய நாடு எந்தளவுக்கு படை பலம் பெற் றுள்ளது என்று காணக் கூடிய தாக உள்ளது.

கொள்கை ஆராய்வு நிறு வனமான யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்ற நிறுவனம் 2017 ஒக்டோபர் மாதத்தில் முல்லைத்தீவில் நிறுத்தப்பட் டிருக்கும் இராணுவ வீரர்களின் தொகை 60,000. இது முல்லைத்தீவில் 2 சாதாரண மக்களுக்கு ஒரு படைவீரர் என்ற விகிதத்தில் அமைகின்றது.

உலகத்தில் வெகுவாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதே சங்களில் முல்லைத்தீவும் ஒன்று என யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்ற நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

கனடாவில் இருந்து வருகை தந்த துழாn வுழசல என்ற நகரபிதா என்னுடன் முள்ளிவா ய்க்கால் நோக்கிப் பயணம் செய்து வந்த போது முல்லைத் தீவில் காணுமிடமெல்லாம் இராணுவ முகாம்கள் அமை ந்துள்ளதைப் பார்த்து இங்கு யுத்தம் முடிவடையவில்லையா? என்று கேட்டார்.

அப்போது போரின் பின் 9 வருடங்கள் கழிந்த நிலையில் ஏன் இவ்வளவு படைமுகாம்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்தார். அந்த நிலை மாற வில்லை. மாறாக இன்னமும் விரிவடைந்து வருவதை நாம் இன்று பார்க்கின்றோம்.

உண்மையில் 60,000 போர் வீரர்கள் அக்காலகட்ட த்தில் முல்லைத்தீவில் நிலை கொண்டிருந்தார்கள் என்று கூறினாலும் இத்தொகை இரா ணுவப் பிரசன்னத் தொகையே என்றும் இலங்கை கடற்படை, ஆகாயப்படையினர் பற்றிய தக்க தகவல்கள் கிடையாமை யால் படையினர் தொகை 60,000 ஐயும் மிஞ்சியிருந்தது என்று கருத்துத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

போர் இல்லாத ஒரு பிரதேசத்தில் இந்தளவு படையினர் பிரசன்னத்திற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

பல சர்வதேச நிறுவனங் கள், ஐக்கிய நாடுகள் போன் றவை இலங்கையில் போரின் பின்னர் படைக் குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்ட பின்னரும் இலங்கை செவிசாய்க்காது இருப்பது ஏன்?

இவ்வாறான செயல்கள் மூலம் தமிழ் மக்களின் கோபத் தைத் தூண்டிவிட்டு அவர் களை எதிர்வினையில் ஈடுபட வைத்து அதைச் சாட்டாக வைத்து தமிழர்களை நிர்மூல மாக்கும் திட்டம் எதுவும் உள் ளதா? என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.

எவ்வளவு தான் படையினர் உங்களுக்கு நன்மைகள் செய் வதாகப் பாசாங்கு காட்டினாலும் அவர்கள் ஒரு அடிப்படைத் திட்டத்தின் அடிப்படையிலேயே வன்னியில் நிலைபெற்றுள்ளர்கள் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

பல இளம் சகோதர, சகோ தரிகள் வறுமையின் நிமித்தம் இவர்களின் பிடிக்குள் அகப்பட் டுள்ளார்கள் என்பதை அவர் களே தெரிந்து கொள்ளாதிருக் கின்றார்கள். அவர்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரத்தை நாம் வழங்க முன்வர வேண்டும்.

இதுபற்றி கூட்டமைப்பினர் எந்தவித கரிசனையையும் இதுவரை காட்டாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது. இன அழிப்பு என்பது தமிழ் மக்க ளைக் கொல்வது மட்டும் அல்ல.
கலாசார இனவழிப்பு, கல்விசார் இன அழிப்பு, பொருளாதார இன அழிப்பு, கட்டமைப்புக் களின் இன அழிப்பென்று பல இன அழிப்புக்கள் உண்டு. இவ்வாறான பலவித இன அழிப்பு நடவடிக்கைகள் வட கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை அறிஞர்கள் பலர் வெளிக்காட்டியுள்ளார்கள்.

எம்மைக் கண்காணிக்கும் படையினரில் 99 சதவிகிதமா னவர்கள் பெரும்பான்மை சமூ கத்தைச் சேர்ந்தவர்கள். எம் முடன் பழகும் பொலிஸாரில் 95 சதவிகிதமானவர்கள் அதே பெரும்பான்மையினர்.

இதன் அர்த்தமென்ன? பெரு ம்பான்மையினருக்கு எம்மிடையே எதையும் நிகழ்த்த, எதையும் செய்ய, எதைச் செய் தாலும் அதற்கான பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களை விடுபடச் செய்ய சட்டப்படி அதி காரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே நாடெங்கும் இரா ணுவ சர்வாதிகாரம் வரப் போகின்றதென்று பெரும்பான் மையினர் அச்சம் கொண்டுள்ள நேரத்தில் வடக்குக் கிழக் கில் அது ஏற்கனவே நடை முறையில் உள்ளது என்பதே உண்மை. பலருக்கு இது விளங்கவில்லை.

இராணுவ சர்வாதிகாரம் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப் படப்போவது மற்றைய மாகா ணங்களில் ஏற்படுத்தப் போகும் அதே காரணங்களுக்கு அன்று, மற்றைய ஏழு மாகாணங்களி லும் நிர்வாக சீர்திருத்தத்துக் காகவும் ஊழலை ஒழிக்கவும் பொருளாதார மேம்பாட்டுக்கா கவும் பௌத்த சமய வலுவாக் கலுக்காகவும் சர்வாதிகாரம் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் வடக்கு-கிழக்கில் பின்வரும் காரணங்களுக்கா கவே சர்வாதிகாரம் பயன்படுத் தப்படலாம் என்று கொள்ள இடமிருக்கின்றது.

1.தமிழர் காணிகளைக் கப ளீகரம் செய்வதற்கு.

2.அந்தக் காணிகளில் சிங் களமயமாக்கலை நடைமு றைப்படுத்துவதற்கு
.
3.ஆனால் அந்த சிங்கள மயமாக்குதலுக்கு பாவிக்கப் போகும் அவர்களின் யுக்தி பௌத்த மயமாக்கலாகும். தமிழ ரின் பௌத்த காலத்து தொல் லியல் எச்சங்களை பௌத்த சிங்கள எச்சங்களாகக் காட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண ஜனாதிபதி செயலணி அதற்கா கவே நியமிக்கப்பட்டுளது.

இவ்வாறு செய்தால் என்ன நடக்கும்?

1.பிற நாடுகளுக்குத் தமிழர் கள் வெளியேறிச் செல்லலாம். அல்லது நாட்டின் மற்றைய பிரதேசங்களுக்குச் சென்று குடியேறலாம்.

2.தொடர்ந்திருந்து இரா ணுவ ஆட்சியின் கீழ் 2 ஆம் தர 3 ஆம் தர பிரஜைகளாக வாழலாம்.

3.எதிர்த்து சிறைகளில் அடைபடலாம் அல்லது தடை முகாம்களில் காலத்தை கழிக்க லாம் அல்லது,

4.முரண்டு பிடித்து சுட்டுக் கொல்லப்படலாம்.

இவை யாவையும் இனப்படு கொலையின் முக்கிய குணாம்ச ங்கள். ஒரு பிரதேசம் வாழ் மக்களை அங்கிருந்து பலாத்கா ரமாக அல்லது சூழ்ச்சியின் துணை கொண்டு அப்புறப்படு த்துவது இனப்படுகொலையின் அம்சமாகும்.

இதற்கு என்ன செய்யலாம்? எமது கட்சி இவை யாவற்றை யும் உணர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எம க்கு மக்களின் அனுசரணை யும் ஆதரவும் கிடைத்தால் எமக்கு அதிகாரம் தானாகவே கிடைக்கும்.

அந்த அதிகாரம் எம்மை எம் மக்களின் ஈடேற்றத்திற்கு உழைக்க உதவும். அந்த அதிகாரம் எம்மை பிறநாட்டு அலுவலர்களுடன் எம் மக்கள் சார்பில் கலந்துறவாட வழிவகுக்கும்.

அந்த அதிகாரம் எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராகத் துணிந்து நிற்க உதவிபுரியும். அந்த அதிகாரம் எமது நாட்டுக்குக் கொடைகள் வழங்கும். கொடையாள நாடுக ளுடன் பேச உதவும். எனவே தான் உங்களின் ஆதரவு ஓக ஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தவ றாமல் மீன் சின்னத்திற்குப் புள்ளடி போடுவதன் மூலம் எமக் குக் கிடைக்க வேண்டும் என நீதியரசர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link