வடக்கு கரையோர ஆபத்து நீங்கியது
Share

வடக்கு கரையோரத்தை சூறாவளி தாக்கும் ஆபத்து நீங்கியுள்ளது.
வங்களா விரிகுடாவில் உருவான நிவர் புயல் வடக்கு கரையை கடந்து சென்றுள்ளது.
நிவர் சூறாவளி தற்போது இலங்கை யில் காங்கேசன்துறை கடற்கரைக்கு வடகிழக்கில் 195 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த 36 மணி நேரத்தில் வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.