Type to search

Headlines

வடக்கின் புதிய ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

Share

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதியாகவும் புனர்வாழ்வு நடவடிக்கை களுக்கான அதிகாரியுமாகவும் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கடமை யாற்றியிருந்தார்.

தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமை பிரதானியாகவும் கடமையாற்றிய அவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜதந்திர பதவி நிலை வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link