வசந்த் & கோ நிறுவனர் கொரோனாவால் உயிரிழப்பு
Share
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த்&கோ நிறுவனருமான வசந்தகுமார் (வயது-70) நேற்று உயிரிழந்தார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்த குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் அவர் நேற்று இரவு 7 மணியளவில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.