Type to search

Headlines

ராஜபக்­ குடும்பத்தைப் பாதுகாக்கவே புதிய அரசியலமைப்புத் திருத்தம்

Share

ராஜபக்ஷர்களின் குடும்பப் பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற் சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொதுத் தேர்தல் பிரசாரங்களின் போது நாட்டுக்கு சேவை செய்வதற்காக தங்களுக்கு பலத்தை பெற்றுக் கொடுக்குமாறே ஆளும் தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இதனைக் கொண்டு நாட்டுக்கு சேவை செய்வதை விடுத்து , 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலேயே அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது.

வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் , இலட்சத்துக்கும் அதிமான நபர்களின் தொழில் வாய்ப்புகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவற்றுக்கான தீர்வினை அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

அரசாங்கம் ராஜபக்ஷர்களின் குடும்ப நலனை கருத்திற் கொண்டே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதென்பது இன்று அரசியல் ரீதியாக பேசப்பட்டு வரும் விடயமாகும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டால் நாங்கள் அதற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.

அரசாங்கத்திற்கு மக்கள் பலத்தை பெற்றுக் கொடுத்துள்ள போதிலும், இன்னமும் ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமலே இருக்கின்றது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link