Type to search

Headlines

யாழ்.போதனாவில் மாடியிலிருந்து விழுந்த பெண் ஊழியர் மரணம்

Share

யாழ். போதனா வைத்திய சாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழி யர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா?

என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவருமென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பளை, கிளாலி கச்சாய்வெளியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் நான்காம் மாடியின் 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே குறித்த பெண் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link