யாழ்.பல்கலையில் பதற்றம் மாணவர்கள் போராட்டம்
Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தையடைந்த போது சமரச முயற்சியில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா மற்றும் பல்கலை நிர்வாகம் ஈடுபட்டபோது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடியுள்ளனர்.
இதன்போது தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள், தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
.