Type to search

Headlines

யாழ்ப்பாணம் அராலி துறையில் இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் முகாம்!

Share

யாழ்ப்பாணம் – அராலி துறையில் உள்ள இராணுவ முகாமில் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று முன்தினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாமில் தங்கியிராத வெளியாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அயல் கிராம மக்கள் நேற்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இராணுவ முகாமில் கொரோனா நோய் சந்தேகநபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அருகில் உள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும் மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கும் இராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத் தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ் கின்ற இந்தப் பகுதியில் இராணுவத்தின் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அராலி இராணுவ முகாமிற்கு பொறுப்பான இராணுவ பொறுப் பதிகாரியிடம் இது தொடர்பாக வினவிய போது,

எமது படையினர் முகாமில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட வில்லை.

விடுமுறையில் சென்ற படையினர் மீண்டும் கடமையில் இணைய வேண்டிய தேவை இருப்பதால் அவர்களை அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை நடத்து வதற்கே எங்கள் இராணுவ முகாம் தயார் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த பகுதி மக்களுடன் நாங்கள் எமது குடும்பத்தவர்கள் போலவே பழகுகின்றோம்.

எனவே அவர்களுக்கு தீங்கு பயக்கும் வண்ணம் செயற்பட மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link