Type to search

Headlines

யாழ்ப்பாணத்துக்கு பாரவூர்தி மூலம் 8 பேர் தப்பித்து வந்துள்ளனர்

Share

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பாரவூர்தி மூலம் 8 பேர் தப்பித்து வந்துள்ளனர்.

குறித்த நபர்களால் யாழ் மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பழை, ஐந்து சந்தி, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்த வர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அடை யாளம் காணப்பட்டால் தனிமைப் படுத்தல்நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும்.

அவர்களால் சொந்தக் குடுமபத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் நேற்று இரவு பாரவூர்தி உட்பட எட்டு பேரும் கைது செய்யப்பட்டுதனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link