மோ.சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டுள்ளது
Share

தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப் பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக் கப்பட்டு சோதனை நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.